
Devon Conway Clean Bowled By Mohammed Shami Gt Vs Csk Ipl 2023! (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் 2023ஆம் ஆண்டில் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே, குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதனையடுத்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே ஆகியோர் களமிறங்கினர்.
ஒரு புறம் ருத்துராஜ் கெய்க்ட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தாலும், மறுபுறம் 6 பந்துகளை எதிர்கொண்ட கான்வே 1 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்போது முகமது ஷமி வீசிய பந்து, கான்வேவின் ஸ்டம்பை பதம் பார்த்தது. இது சிஎஸ்கேக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.
மேலும் டெவான் கான்வேயின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் முகமது ஷமி தனது 100ஆவது விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் டெவான் கான்வே ஆட்டமிழந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.