
devon-conway-coach-glenn-pocknall-wants-him-to-play-for-mumbai-indians (Image Source: Google)
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ் போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மேலும் இத்தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கு அறிமுகமான நியூசிலாந்து வீரர் டேவன் கான்வே தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார்.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் டேவன் கான்வே விளையாடும் காலம் வெகுதொலைவில் இல்லை என அவரது பயிற்சியாளர் கிளென் பொக்னால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பொக்னால், “நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டேவன் கான்வேவை எந்த அணியும் ஏலம் எடுக்கததைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் அவரது நேரம் வரும் போது அவருக்கான வாய்ப்பு தேடி வரும் என்பதில் உறுதியாக இருந்தேன்.