
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஆயூஷ் மாத்ரே 34 ரன்களையும், டெவான் கான்வே 52 ரன்களையும், உர்வில் படேல் 37 ரன்களையும், சேர்த்தனர். இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸ் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் ரவீந்திர ஜடேஜா 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களைச் சேர்த்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் சிஎஸ்கேவின் டெவால்ட் பிரீவிஸ் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.