
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கக் கூடியவர் மகேந்திர சிங் தோனி. வரலாற்று சாதனைகளை படைக்கக்கூடிய சில வீரர்களுக்கு சில பிரத்தியேக குணங்கள் இருக்கும். அந்த குணங்கள் தான் அவர்களை மற்ற வீரர்களிடமிருந்து வேறுபடுத்தி சாதனை படைக்க காரணமாகவும் அமையும். அப்படி தோனியிடம் பல நல்ல பழக்கங்கள் இருக்கிறது.
கிரிக்கெட்டை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு எதிர்கொள்வது தான் தோனியின் ஸ்டைல் .2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது ஒரு தனி கதை தான். சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய சுரேஷ் ரெய்னா அந்த சீசனில் தொடர்ந்து சொதப்பினார். இதனால் தோனி எடுத்த ஒரு முடிவு சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
உத்தப்பாவை அணியில் சேர்த்த தோனி, இங்கிலாந்து வீரர் மொயின் அலியை ரெய்னா இடத்தில் மூன்றாவது வீரராக களம் இறக்கி ஆச்சரியத்தை கொடுத்தார். தோனியின் இந்த நகர்வு சிஎஸ்கே அணிக்கு பிளாக்பஸ்டர் முடிவாக மாறியது. இது போன்ற யுக்திகளை கையாள்வதில் தோனி வல்லவர். இந்த நிலையில் தோனியிடம் ஒரு சிறந்த குணம் இருப்பதாக ராபின் உத்தப்பா பாராட்டியுள்ளார்.