
Dhoni, Kohli, Rohit, Bumrah retained by IPL franchises for 2022 (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14ஆவது ஐபிஎல் சீசனுக்கு பிறகு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 15ஆவது ஐபிஎல் சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக இரண்டு அணிகள் சேர்ந்து மொத்தம் 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அண்மையில் நடைபெற்று முடிந்த புதிய அணிகளுக்கான ஏலத்தில் புதிய இரண்டு அணிகள் ஏலத்தில் எடுக்கப்பட்டது.
அதன்படி அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாக வைத்து இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது ஒவ்வொரு அணியிலும் தலா நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும் மீதமுள்ள வீரர்களை ஏலத்தில் விடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.