VHT2025: ருதுராஜ் கெய்க்வாட் சாதனையை சமன்செய்த துருவ் ஷோரே!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் நாக் அவுட் போட்டிகளில் தொடர்ச்சியாக சதங்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை விதர்பா அணியின் துருவ் ஷோரே படைத்துள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில்மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா மற்றும் கருண் நாயர தலைமையிலான விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதரா நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கர்நாடகா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கர்நாடகா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்தது. கர்நாடகா அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மறன் ரவிச்சந்திரன் 101 ரன்கள் குவித்தார். மேற்கொண்டு கிருஷ்ணன் ஸ்ரீஜித் 78 ரன்களையும், அபினவ் மனோஹர் 79 ரன்களையும் சேர்த்தனர். விதர்பா தரப்பில் தர்ஷன் நல்கண்டே, நாச்சிகேத் பூதே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Trending
இதனையடுத்து களமிறங்கிய விதர்பா அணியில் யாஷ் ரத்தோட், கருண் நாயர் ஆகியோர் சோபிக்க தவறினர். மாற்றொரு தொடக்க வீரரான துருவ் ஷோரே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் சதமடித்தும் அசத்தினார்.பின் 110 ரன்கள் எடுத்த நிலையில் துருவ் ஷோரே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஹர்ஷ் தூபே 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 63 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
விதர்பா அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 312 ரன்களில் ஆல் அவுட்டானது. கர்நாடகா அணி தரப்பில் வசுகி கௌஷிக், பிரஷித் கிருஷ்ணா மற்றும் அபிலேஷ் ஷெட்டி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் கர்நாடகா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 5ஆவது முறையாக விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய விதர்பா அணி வீரர் துருவ் ஷோரே தனித்துவ சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி இத்தொடரில் துருவ் ஷோரே தொடர்ச்சியாக மூன்று சதங்களை விளாசினார். அதிலும் குறிப்பாக நடப்பு விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் கலிறுதிச்சுற்று, அரையிறுதிச்சுற்று மற்றும் இறுதிப்போட்டி என நாக் அவுட் சுற்றில் அவர் சதம் விளாசி அசத்தினார்.
Dhruv Shorey hits three back-to-back centuries in the Vijay Hazare Trophy!#Cricket #TeamIndia #VijayHazareTrophy #DhruvShorey pic.twitter.com/RJofOoaxS7
— CRICKETNMORE (@cricketnmore) January 18, 2025
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் நாக் அவுட் சுற்றுகளில் சதங்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் மஹாராஷ்டிரா அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 2022-23ஆம் ஆண்டு விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நாக் அவுட் சுற்றுகளில் அடுத்தடுத்து சதமடித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை துருவ் ஷோரே தற்போது சமன்செய்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now