
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயண் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி என 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ் கோட்டியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். மேலும் சமீப காலமாக தடுமாறி வரும் ஸ்ரேயாஸ் ஐயரும் இந்திட டெஸ்ட் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப்க்கிற்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
முன்னதாக ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி கவணத்தை ஈர்த்த ஆகாஷ் தீப், இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கெதிராக விளையாடும் இந்திய ஏ அணியில் இடம்பிடித்தார். அதன்படி பயிற்சி டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆகாஷ் தீப் சிங்கிற்கு இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.