
இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங். இவர் 1998ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளது.
அதிலும் குறிப்பாக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அண்மையில் தான் இவரது விக்கெட் சாதனையை அஸ்வின் முறியடித்தார். 236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹர்பஜன் சிங், 28 டி20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கடைசியாக 2016ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங், அதன்பின்னர் 5 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடாத நிலையில், அண்மையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசியாக 2015ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடினார். அதன்பின்னர் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.