
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி தொடக்க வீரரும், டி20 கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரருமானவர் ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெயில். தற்போது 43 வயதான கிறிஸ் கெயில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதற்கு வயதாகிவிட்டது தான் காரணம் என கூறப்பட்டது. ஆனால், அதற்கான காரணமே வேறு என்று சமீபத்தில் அளித்துள்ள பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் எனக்கான மரியாதை கிடைப்பதில்லை. கிரிக்கெட்டுக்காக நான் எவ்வளவோ செய்துள்ளேன். ஆனால் அதனை யாரும் நினைத்து கூட பார்த்த மாதிரி தெரியவில்லை. அதனால் தான் இனி ஐபிஎல் தொடரில் விளையாட தேவையில்லை என்று முடிவு எடுத்து மெகா ஏலத்தில் பங்கேற்கவில்லை.
கிரிக்கெட்டுக்கு பிறகு ஒரு வாழ்க்கை உள்ளது. அந்த வாழ்க்கையை வாழ பழகி கொள்கிறேன் என்று கூறினார். ஆனால் அந்த பேட்டி முடிவதற்குள் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட முடிவு எடுத்துள்ளதாக கூறி, பேட்டி எடுத்தவரையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார். நான் மீண்டும் ஐபிஎலில் விளையாட போகிறேன். அவர்களுக்கு நான் தேவை.