
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசனுக்கான மினி வீரர்கள் ஏலம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான சாம் கரணை ரூ. ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை சாம் கரண் படைத்துள்ளார் . இதற்கு முன்னர் கடந்த 2021ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் கிறிஸ்மோரிஸை ராஜஸ்தான் அணி ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது.
டி20 உலகக்கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே கலக்கிய சாம் கரண், தொடர் நாயகன் விருதை பெற்றார். இதனையடுத்து பஞ்சாப் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே கடும் யுத்தம் நடைபெற, ட்இறுதியில் பஞ்சாப் அணி அவரை ரூ. 18.50 கோடிக்கு ஏலம் எடுத்து ஆச்சரியம் தந்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டவர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது சாம் கரணுடன் சேர்த்து, கேமரூன் கிரீன் மற்றும் பென் ஸ்டோக்ஸும் புதிய ரெக்கார்ட்-ஐ பதிவு செய்தனர். கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு மும்பையும், பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை அணியும் வாங்கியது.