Advertisement

பிசிசிஐ தலைவர் பதவியை மட்டும் கங்குலி பார்க்க வேண்டும் - வெங்சர்கார் தாக்கு!

இந்திய கிரிக்கெட் அணியை தூக்கி நிறுத்திய அரசனாக விளங்கிய கங்குலி, தற்போது தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Advertisement
Dilip Vengsarkar slams Sourav Ganguly, reveals his take on Virat Kohli-BCCI row
Dilip Vengsarkar slams Sourav Ganguly, reveals his take on Virat Kohli-BCCI row (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 23, 2021 • 03:03 PM

கேப்டன்களை மாற்றும் விவகாரத்தில் கங்கலியின் செயல்பாடு, சர்ச்சைக்கு தொடக்க புள்ளியாக அமைந்தது. விராட் கோலியை பிசிசிஐ அவமானப்படுத்தியதாக புகார் எழுந்தது. இது குறித்து கங்குலி ஒரு தன்னிலை விளக்கத்தை தந்தார். அதில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் விராட் கோலியை மாற்றியது பிசிசிஐயும், தேர்வுக்குழுவும் சேர்ந்து எடுத்த முடிவு என்று தெரிவித்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 23, 2021 • 03:03 PM

டி20 போட்டிகளிலிருந்து விலக வேண்டாம் என்று விராட் கோலியிடம் பேசியதாக கங்குலி தெரிவித்தார். ஆனால், பிசிசிஐயிடமிருந்து அப்படி யாரும் என்னிடம் பேசவில்லை என்று கோலி கூறினார்.

Trending

இந்த நிலையில், முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் தீலிப் வெங்சர்கார் கங்குலியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். கங்குலியில் பணி பிசிசிஐ தலைவர் என்ற பொறுப்பு மட்டும் தான், தேர்வுக்குழுவின் பணியை கங்குலி பார்க்க தேவையில்லை என்று கூறினார். 

தேர்வுக்குழுவிற்காக கங்குலி பேசத் தேவையில்லை என்றும், கங்குலி தனது பணியை மட்டும் பார்த்தால் போதுமானது என்றும் அவர் கூறினார்.

இந்திய அணி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றியதில் இருந்தே கேப்டன்கள் அடிக்கடி மாற்றுவது தொடர்கதையாகி விட்டதாக தீலிப் வெங்சர்கார் கூறினார். ஒரு தொடருக்கு 4 கேப்டன்கள் மாற்றப்பட்ட காலம் போய், தற்போது தான் நிலையான கேப்டன் என்ற சூழல் உருவாகியுள்ளது. அதனை பிசிசிஐ கெடுக்க கூடாது என்று வலியுறுத்தினார்.

ஒரு அணிக்கு எது தேவை, என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை தேர்வுக்குழுவும், கேப்டனும் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர , பிசிசிஐ தலைவர் முடிவு செய்யக் கூடாது என்று குற்றஞ்சாட்டினார். தீலிப் வெங்சர்கார் தேர்வுக்குழுத் தலைவராக இருந்த போது தான் விராட் கோலியை அணியில் தேர்வு செய்தார். இதற்காக தனது பதவியையும் இழந்ததாக வெங்சர்கார் கூறினார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement