-mdl.jpg)
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டரான தினேஷ் கார்த்திக் சமீபத்தில் இந்திய அணியின் தனது ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்திருந்தார். அதன்படி, தினேஷ் கார்த்திக் தேர்வு செய்துள்ள அணியின் தொடக்க வீரர்களாக விரேந்திர சேவாக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரைத் தேர்வுசெய்துள்ளார். மேற்கொண்டு மூன்றாம் வரிசையில் ராகுல் டிராவிட்டையும், நான்காம் இடத்தில் சச்சின் டெண்டுல்கரையும் தேர்வு செய்துள்ள அவர், ஐந்தாம் இடத்தில் விராட் கோலியையும், ஆறாம் இடத்தியில் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கையும் தேர்வுசெய்துள்ளார்.
மேற்கொண்டு அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, அனில் கும்ப்ளே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ள தினேஷ் கார்த்திக், வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜாகீர் கானை தேர்வுசெய்ள்ளது. அதேசமயம் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்துள்ளர். மேற்கொண்டு அணியின் 12ஆவது வீரராக ஹர்பஜன் சிங்கை தேர்வுசெய்துள்ளார். அதேசமயம் இந்த அணியில் இந்திய அணிக்கு டி20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைகளை பெற்றுக்கொடுத்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி ஆகியோருக்கு தினேஷ் கார்த்திக் தனது அணியில் இடம் கொடுக்கவில்லை.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த இந்த லெவனில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு யாரையும் தேர்வு செய்யாததுடன், அந்த இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயரையும் சேர்க்காமல் விட்டது விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இந்நிலையில், அணியில் நான் விக்கெட் கீப்பரை தேர்வு செய்யவில்லை என்பது தனது தவறு என்றும், அணியை உருவாக்கும் போது விக்கெட் கீப்பரை சேர்க்க மறந்துவிட்டதாகவும் தினேஷ் கார்த்திக் விளக்காமளித்துள்ளார்.