
ஐபிஎல் தொடரின் 60ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து பெங்களுரு அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி டூ பிளெஸிஸ், மேக்ஸ்வெல் மற்றும் அனுஜ் ராவத்தின் அபாரமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்துள்ளது.
இதனிடையே ஆர்சிபி அணியின் பேட்டிங்கின் போது முக்கிய நேரத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், லெக் ஸ்பின்னரான ஆடம் ஷாம்பா பந்துவீச்சில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 16ஆவது முறையாக தினேஷ் கார்த்திக் டக் அவுட்டில் வெளியேறியுள்ளது தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட்டான மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை தினேஷ் கார்த்திக் சமன் செய்துள்ளார். இதன் மூலம் 16 முறை டக் அவுட்டாகி, அதிக முறை டக் அவுட்டான வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் முதலிடத்தில் உள்ளனர்.