
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் இந்தியா 8 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இந்தியா முதல் அணியாக தகுதி பெற்றுள்ளாதல் சொந்த மண்ணில் 2011 உலகக் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் மிகவும் ஆழமாக ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் தற்போதைய அணியில் பேட்டிங் துறையில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில், ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற அனைவருமே நல்ல ஃபார்மில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு போட்டியாக பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோர் வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டு பெரிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகின்றனர்.
அதே போல குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி மிடில் ஓவர்களில் விக்கெட்களை எடுப்பதால் சொந்த மண்ணில் இந்தியா இதுவரை யாராலும் தோற்கடிக்க முடியாத வலுவான அணியாக ஜொலித்து வருகிறது. இருப்பினும் 2019 உலகக்கோப்பை அரையிறுதி உட்பட ஐசிசி தொடர்களில் பெரும்பாலும் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் நியூஸிலாந்தை நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் அரையிறுதியில் எதிர்கொள்வது இந்திய ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.