Advertisement
Advertisement
Advertisement

இவர் தான் மிகவும் கடினமான இந்திய பந்துவீச்சாளர் - தினேஷ் கார்த்திக்!

இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பதிலேயே வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தான் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் என சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan February 13, 2023 • 20:18 PM
Dinesh Karthik reveals 'toughest Indian bowler' he has ever faced, calls him torture
Dinesh Karthik reveals 'toughest Indian bowler' he has ever faced, calls him torture (Image Source: Google)
Advertisement

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. இந்திய அணியின் இந்த அபார வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது இந்திய ஸ்பின்னர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தான்.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களை எடுத்த சூழலில் 2ஆஅவது இன்னிங்ஸில் நான் எடுக்கிறேன் என அஸ்வின் செய்துக்காட்டினார். மொத்தமுள்ள 20 விக்கெட்களில் 15 விக்கெட்களை இந்த ஸ்பின் ஜோடி தான் கைப்பற்றியது. குறிப்பாக யாரும் எதிர்பார்க்காத வகையில் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

Trending


இந்நிலையில் ஷமி குறித்து தினேஷ் கார்த்திக் சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார். அதில், “முகமது ஷமி குறித்து ஒரே வார்த்தை சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு "டார்ச்சர்". வாழ்நாளில் வலைபயிற்சிகளில் நான் எதிர்கொண்ட மிகவும் கடினமான பவுலர் என்றால் அது ஷமி தான். வலைகளில் அவரை எதிர்த்து ஆடுவது அந்த அளவிற்கு சிரமம்.

நான் மட்டும் தான் இப்படி நினைக்கிறேன் என்றால் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலியும் ஷமிக்கு எதிராக விளையாடவே கூடாது எனக்கூறுவார்கள். முகமது ஷமி கைகளை நேராக வைத்து டெலிவரி செய்வார். இயற்கையாகவே 6 - 8 மீட்டர் லெந்த்களில் தான் வீசுவார். இதனால் அவரின் பவுலிங்கில் பெரும்பாலும் ஸ்லிப் கேட்ச்கள் அல்லது கீப்பர் கேட்ச்-கள் மூலம் தான் விக்கெட் விழும். இதுதான் அவரின் சிறப்பம்சம்.

இதே தன்மைகளால் தான் முகமது ஷமி துரதிஷ்டசாலியாகவும் இருந்துள்ளார். நிறைய முறை பந்து எட்ஜாகி பவுண்டரிகளுக்கு சென்றுவிடுகிறது. அதுவும் அதிகம் பவுன்சாகும் அயல்நாட்டு களங்களில் நிறைய எட்ஜாகி விடுகின்றன” என கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement