
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேப்டவுன் அணியில் ரிஸா ஹென்றிஸ், ரஸ்ஸி வேண்டர் டுசென் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ரஸ்ஸி வேண்டர் டுசென் 43 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய ரீஸா ஹென்றிஸுகும் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் டெவால்ட் பிரீவிஸ் 14 ரன்களிலும், டெலானோ போட்ஜீட்டர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் - ஜோ ரூட் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடி வந்த ஷாய் ஹோப் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களில் பிரிட்டோரியஸும் தனது விக்கெட்டை இழந்தார்.