
டி20 உலகக் கோப்பை போட்டித் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களின் பெயரை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விலகியிருந்த ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு மாற்றாக அக்ஸர் படேல் அணியில் இடம்பெற்றுள்ளார். ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். இந்திய அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றுள்ளனர்.
இதில் மாற்றுவீரர்களாக முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அணியில் சஞ்சு சாம்சன், முஹம்மத் ஷமி இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.