
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறினாலும் அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது.
இந்தப் படுதோல்விக்கு இந்திய அணியின் ஆட்ட அணுகுமுறை தைரியமாக இல்லாததுதான் மிக முக்கியக் காரணம். மிகக் குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் மூத்த பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தைரியமான முறையில் ஆட்டத்தை அணுகவில்லை.
மாறிவரும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு ஏற்ப இந்திய அணி செயல்படவில்லை. எனவே இதற்கு தகுந்தார் போல் புதிய ஒரு இளம் இந்திய அணியை உருவாக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தற்பொழுது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஹர்திக் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். துணை கேப்டனாக சூரியகுமார் யாதவ் கொண்டுவரப்பட்டு இருக்கிறார்.