
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இரு அணிகளும் 2- 2 என சமநிலையில் இருந்த சூழலில் கடைசி டி20 போட்டி நேற்று பெங்களூருவில் தொடங்கியது.
தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் இந்த போட்டி துரதிஷ்வசமாக ரத்து செய்யப்பட்டது. இந்திய அணி பேட்டிங் செய்ய தொடங்கிய போது வந்த மழை, நீண்ட நேரம் நீடித்ததால் முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளும் 2 -2 என வெற்றியை பிரித்துக்கொண்டனர்.
இந்நிலையில், 0- 2 என்ற நிலையில் இருந்து வந்த இந்திய அணிக்கு ஒருபுறம் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆனால் கேப்டன் ரிஷப் பந்த் மீதான விமர்சனம் மட்டும் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அவரின் பேட்டிங் தான். 5 போட்டிகளையும் சேர்த்து மொத்தமாக 58 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட்டும் மோசமாக இருந்தது. இதனையடுத்து, டி20 உலகக்கோப்பைக்கு அவரை கொண்டு செல்லாதீர்கள், அதிரடி என்ற பெயரில் ஏமாற்றுவார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.