முதல் டி20-க்கான இந்திய அணியில் இடம்பிடிப்பது யார்?
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் உம்ரான் மாலிக் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.போட்டிகள் ஜூன் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஐபிஎல் தொடாரில் ல் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தினேஷ் கார்த்திக்கையும் சேர்த்துள்ளதால், இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Trending
இளம் இந்திய அணியை வீழ்த்த, தென் ஆப்பிரிக்க அணி பலமிக்க படையை களமிறக்க உள்ளது. ஐபிஎலில் சிறப்பாக செயல்பட்ட குவின்டன் டி காக், மார்க்கரம், யான்சன், வன் டீர் துஷன், டேவிட் மில்லர் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதால், இந்திய அணிக்கு நிச்சயம் கடும் சவால்களை அளிப்பார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிராக இந்திய இளம் பந்துவீச்சாளர்கள் எப்படி செயல்படப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் உம்ரான் மாலிக்கை வைத்து இவர்களை சமாளித்து விடலாம் என பலர் பேசி வருகிறார்கள். ஆனால், பயிற்சியின்போது உம்ரான் மாலிக்கைவிட அர்ஷ்தீப் சிங் துல்லியமாகவும், யார்க்கர்களையும் சிறப்பாக வீசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்தான் சேர்க்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனலும் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட்,
“உம்ரான் மாலிக் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறார். ஆனால் அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனென்றால் ஆட்டம் நடைபெறும் நேரத்தில் அதிகப்படியான ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அந்த அழுத்தத்தை ஏற்று, களத்தில் செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதனால் அவருக்கு இத்தொடரில் நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான் ஆகியோரும் வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல், இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகிய நான்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக மூன்று பேருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், அவர்களில் யார் யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now