
SL vs BAN, 2nd Test: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் வங்கதேச அணி வீரர்கள் வலுவான மன உறுதியுடன் உள்ளதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ளது. இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 25) நடைபெறவுள்ளது. இப்போட்டியானது கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரின் முதல் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் வாய்ப்பை பெறும். இதன் காரணமாக இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இப்போட்டியில் வெற்ற் பெறும் முனைப்பில் இரு அணியின் வீரர்களும் தீரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக வங்கதேச அணி பயிற்சியாளர் சிம்மன்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.