
19ஆவது ஆசிய கோப்பை விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் செப்டம்பர் 23ஆம் தேதி துவங்கி அக்டோபர் எட்டாம் தேதி முடிவடைய இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த போட்டிகள் கரோனா தொற்று காரணமாக இந்த வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது .
தற்போது இந்த போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசியாவைச் சேர்ந்த அனைத்து நாடுகளும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. கடந்த ஆசிய போட்டிகளிலும் இடம் பெற்ற கிரிக்கெட் இந்த வருட ஆசிய போட்டிகளிலும் இடம் பெற்று இருக்கிறது. கடந்த முறை இலங்கை அணி தங்கப் பதக்கத்தை வென்றது .
இந்த முறை பிசிசிஐ முதல் முதலாக ஆசிய போட்டிகளில் கலந்து கொள்வதற்கு கிரிக்கெட் அணியை அனுப்ப தயாராக இருக்கிறது . இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் தேர்வு செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு சிஎஸ்கே அணியின் தொடக்க வீரரான ருத்ராஜ் கெயிக்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.