
தமிழ்நாட்டைச் சேர்ண்ட்த 37 வயதான தினேஷ் கார்த்திக், கடந்த 2004 வாக்கில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமானார். அப்போது முதலே அணியில் தனக்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விளையாடி வருகிறார். அவர் ரசிகர்கள் அன்போடு டிகே என அழைப்பது வழக்கம். இந்திய அணிக்குள் பலமுறை கம்பேக் கொடுத்த வீரர். இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இந்நிலையில், 2022 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதன் காரணமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அதுவும் டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக இவர் பார்க்கப்பட்டார். இதனால் அவருக்கு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது.
ஆனால் அத்தொடரில் அவரது பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லாதத்தால், இறுதி கட்ட போட்டிகளில் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டார். இந்த போதும் இந்திய அணி அரையிறுதிச்சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியது. இதனால் இனி தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பிடிப்பாரா என்ற கேள்வியும் எழத்தொடங்கின.