
ஐபிஎல் தொடரின் 35ஆவது லீக் போட்டியாக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில், டாசை இழந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பவர் பிளேவில் முதல் ஐந்து ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
ஆனால் அதற்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மாவின் நகர்வுகளும் சரியில்லை, மும்பை அணியின் பந்து வீச்சும் சரியில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு குஜராத் 206 ரன்கள் குவித்தது. கில் அரைசதம் அடித்து அசத்தினார். டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவாட்டியா மூவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு இவ்வளவு பெரிய இலக்கை துரத்துவதற்கு யார் முன் என்று ரண்களை எடுத்துக் கொடுத்து இருக்க வேண்டுமோ, அந்த நட்சத்திர பேட்ஸ்மேன்கள் எல்லோரும் சொற்ப ரன்களில் வெளியேறி சொதப்பினார்கள். இந்த காரணத்தால் 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே வந்தது. இதனால் மிகப்பெரிய அளவில் 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியை தழுவியது.