
இலங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் மகளிர் அணியானது, 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது மே 11ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. அந்தவகையில் முதலில் டி20 தொடரும், அதனைத்தொடர்ந்தும் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து டி20 மற்றும் ஒருநாள் மகளிர் அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹீதர் நைட் தலைமையிலான இந்த அணியில் பேட்டிங் ஆல் ரவுண்டர் சோபியா டங்க்லிக்கு இடம் கிடைக்கவில்லை. மேலும் அவரது இடத்தில் டாமி பியூமண்டிற்கு ஒருநாள் அணியில் மட்டுமே இடம் கிடைத்துள்ளது. அவர்களைத் தவிர்த்து மையா பௌச்சர் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணிகளில் இடம்பிடித்துள்ளார்.
மேலும் அலிஸ் கேப்ஸி, சோஃபி எக்லெஸ்டோன், நாட் ஸ்கைவர் பிரண்ட், சாரா கிளென், எமி ஜோன்ஸ் டேனியல் வைட் போன்ற நட்சத்திர வீராங்கனைகள் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணியில் தங்களது இடத்தை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.