உபயோகப்படுத்தப்பட்ட மைதானத்தை வழங்கியதற்கு மன்னிப்பு கோரிய இசிபி!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிக்கு ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட மைதானத்தை வழங்கியதற்காக மன்னிப்பு கோரியது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் .
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 16) பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இந்த மைதானத்தில் டி 20 பிளாஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் காரணமாக இந்தியா - இங்கிலாந்து மகளிர் டெஸ்ட் போட்டிக்கு மைதானத்தை சரிவர பராமரிக்க முடியவில்லை என்பதற்கு மன்னிப்பு கோருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Trending
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக தயார் செய்யப்பட்ட மைதானத்தில் ஏற்கெனவே 37 ஓவர்கள் விளையாடியிருப்பதால் ஏமாற்றமடைகிறோம். இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி அவர்களுக்காக தயார் செய்யப்பட்ட மைதானங்களில் விளையாட தகுதியானவர்கள் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் இன்று நடைபெறும் போட்டியில் எங்களால் அதை வழங்க முடியவில்லை என்பதை நினைத்து வருத்தமடைகிறோம்.
மேலும் கடைசி நேரத்தில் மைதானம் குறித்து அறிவித்ததால் எங்களால் வேறு புதிய மைதானத்தை அவர்களுக்கு வழங்க முடியவில்லை. அதேசமயம் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு ஏற்றவாறு மைதானத்தில் சீரமைப்பது கடினம் என்பதால் இந்த முடிவினை நாங்கள் எடுத்தோம்” என்று தெரிவித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now