
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிய சூழலில் வெற்றியாளர் யார் என்று தெரியாமல் முடிந்துள்ளது. மான்செஸ்டர் நகரில் நடைபெறவிருந்த 5ஆவது டெஸ்ட் போட்டி கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உட்பட 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்படவில்லை. எனினும் கரோனா அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் வீரர்களை களத்திற்கு அனுப்ப விரும்பவில்லை எனக்கூறி பிசிசிஐ போட்டியை ரத்து செய்யுமாறு இங்கிலாந்து வாரியத்திடம் கோரியது. இதனையடுத்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
எனினும் தொடரின் வெற்றியாளர் யார் என்பது குறித்து இன்னும் முடிவு எட்டப்படாமலேயே உள்ளது. இந்த போட்டியை வேறு ஒருநாளில் நடத்திக்கொள்ளலாம் என பிசிசிஐ கூறியிருப்பதாக தெரிகிறது. ஆனால் அதற்கு சாத்தியம் இல்லை என இங்கிலாந்து தரப்பு கூறி வருகிறது. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.