காயத்தால் அவதிப்படும் மார்க் வுட்; இந்தாண்டு முழுவது விளையாடுவது சந்தேகம்!
வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் இந்த ஆண்டு முழுவதும் விளையாடமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மான்செஸ்டர் மற்றும் லார்ட்ஸில் நடந்த முதல் இரு டெஸ்டுகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக தனது ஓவரை முடிப்பதற்கு முன்னரே பெவிலியன் திரும்பினார். அதன்பின் அந்த ஓவரில் மீதமிருந்த பந்துகளை ஜோ ரூட் வீசினார். இந்நிலையில் மார்க் வுட்டின் காயம் தீவிரமடைந்திருப்பதன் காரணமாக, இலங்கை அணிக்கு எதிரான எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் விலகியதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
Trending
மேற்கொண்டு தொடரில் இருந்து விலகிய மார்க் வுட்டிற்கு பதிலாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல்லிற்கு இங்கிலாந்து டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் இத்தொடரின் இரண்டாவது போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவனில் ஜோஷ் ஹல்லிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் தற்சமயம் நடைபெற்றும் வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் இத்தொடரில் காயமடைந்த மார்க் வுட் தற்சமயம் தனது காயத்திற்காக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவரது மருத்துவ அறிக்கையின் படி மார்க் வுட்டின் காயம் தீவிரமடைந்துள்ளதாகவும், அதிலிருந்து குணமடைய போதிய கால அவகாசம் தேவை என்பதாலும், அவர் இனி இந்தாண்டு நடைபெறவுள்ள எந்தவொரு போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இதுகுறித்து இசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் இந்த ஆண்டு முழுவதும் விளையாடமாட்டார்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணிக்காக இதுவரை 37 டெஸ்ட், 66 ஒருநாள் மற்றும் 34 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மார்க் வுட் 200க்கு மேற்பட்ட விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் ஆயிரம் ரன்களையும் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now