
EN-U19 vs IN-U19, 4th ODI: இங்கிலாந்து அண்டர்19 அணிக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் விஹான் மல்ஹோத்ரா ஆகியோர் சதமடித்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கும் உதவினர்.
இந்திய அண்டர்19 அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது வொர்செஸ்டரில் நேற்று நடைபெற்ற நிலையில், இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஆயூஷ் மாத்ரே 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இணைந்த வைபவ் சூர்யவன்ஷி மற்றும் விஹான் மல்ஹோத்ரா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யவன்ஷி 52 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் 13 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 143 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய விஹான் மல்ஹோத்ராவும் சதமடித்த நிலையில் 15 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 129 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர்.