
EN-U19 vs IN-U19, 4th ODI: இங்கிலாந்து அண்டர்19 அணிக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் விஹான் மல்ஹோத்ரா ஆகியோர் சதமடித்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கும் உதவினர்.
இந்திய அண்டர்19 அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டிகள் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வொர்செஸ்டரில் நேற்று நடைபெற்ற நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து இங்கிலாந்து அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஆயூஷ் மாத்ரே ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய விஹான் மல்ஹோத்ரா ஒரு ரன்னிலும், வைபவ் சூர்யவன்ஷி 33 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் அம்ரிஷ் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 66 ரன்களைச் சேர்த்தார். இதன் காரணமாக இந்திய யு19 அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஃபிரெஞ்ச் மற்றும் ரால்ஃபி ஆல்பர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.