ENG v IND 2022: “Deserved to lose”, says Jos Buttler after England's series- conceding loss in 2nd T (Image Source: Google)
எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் 49 முதல் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை ருசித்தது. இதன் மூலம் இந்த டி20 தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி தற்போது 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஜடேஜா, ரோஹித், ரிஷப் பந்த் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 170 ரன்களை குவித்தது. பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியால் 121 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.
இதன் காரணமாக 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்த இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்தது.