
இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 4ஆம் நாளில் இங்கிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசியது.
4ஆம் நாள் முடிவில் இந்திய அணி, 82 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. ரிஷப் பந்த் 14, இஷாந்த் சர்மா 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
அதன்பின் 5ஆம் நாளான இன்று, ஆண்டர்சன் ஓவரில் ரிஷப் பந்த் ஒரு பவுண்டரி அடித்தார். பிறகு அதே ஓவரில் இஷாந்த் சர்மாவும் ஒரு பவுண்டரி அடிக்க இந்திய ரசிகர்கள் குஷியானார்கள். ஆனால் ரிஷப் பந்த் 22 ரன்களிலும் இஷாந்த் சர்மா 16 ரன்களிலும் ஒல்லி ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு பும்ராவும் ஷமியும் கூட்டணி சேர்ந்தார்கள்.