
ENG v IND, 3rd Test: Virat Kohli Wins The Toss, Opts To Bat First (Image Source: Google)
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸிலுள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் எந்தவொரு மாற்றமும் இன்றி விளையாடுகிறது. அதேசமயம் இங்கிலாந்து அணியில் டோமினிக் சிப்லி, மார்க் வுட் ஆகியோருக்கு பதிலாக டேவிட் மானல், கிரேக் ஓவர்டன் ஆகியோர் விளையாடுகின்றனர்.