
ENG v IND, 4th Test: England Makes Use Of Morning Session As India Score 54/3 At Lunch (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - கே.எல்.ராகுல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 4 ரன்களில் புஜாராவும் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
அதைத்தொடர்ந்து கோலியுடன் இணைது விளையாடிவந்த கே.எல்.ராகுலும் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனால் 39 ரன்களிலேயே இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.