
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இதையடுத்து இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் பக்கேற்கும் இரு அணியின் பிளேயிங் லெவனும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள தொடக்க வீரர் பென் டக்கெட் தனது மனைவின் குழந்தைப் பிறப்பின் காரணமாக இப்போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் தற்சமயம் எழுந்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “எங்கள் அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் தனது குழைந்த பிறப்பிற்காக காத்திருக்கிறார். இப்போட்டி தொடங்கும் முன்பு அவருக்கு குடும்பத்திலிருந்து அழைப்பு வந்தால் அவர் இப்போட்டியில் இருந்து விடுவிக்கப்படுவார். ஒருவேளை ஆட்டம் தொடங்கிய பிறகு அவருக்கு செய்தி கிடைத்தால், பென் டக்கெட் தனது வீட்டிற்கு சென்று அதன்பின் மீண்டும் அணியுடன் வந்து இணைவார்.