ENG vs IND, 2nd Test: நான்காம் நாள் ஆட்டத்தை மணி அடித்து தொடங்கி வைத்த தீப்தி சர்மா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காம் நாள் ஆட்டத்தை இந்திய மகளிர் அணி ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா மணி அடித்து தொடங்கிவைத்தார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி கே.எல்.ராகுலின் சதத்தால் 364 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியிலும் கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 180 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Trending
இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 391 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 29 ரன்கள் முன்னிலையும் அந்த அணி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இன்றைய நாளில் போட்டியை இந்திய மகளிர் அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா மணி அடித்து தொடங்கிவைத்தார்.
Deepti Sharma Will Ring The Bell Today At Lord's!
— CRICKETNMORE (@cricketnmore) August 15, 2021
.
.#ENGvIND #Cricket #indiancricket #deeptisharma pic.twitter.com/kTSVq8gf0w
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் ஒவ்வொரு நாளிலும் புகழ்பெற்ற வீரர்களைக் கொண்டு மணி அடித்து போட்டியைத் தொடங்குவதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வழக்கமாக கொண்டுள்ளது.
அந்த வகையில் இப்போட்டியின் நான்காம் நாளான இன்று தீப்தி சர்மா மணி அடித்து போட்டியை தொடங்கிவைத்துள்ளார். முன்னதாக நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஃபருக் எஞ்ஜினியர் மணி அடித்து தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now