Advertisement

ENG vs IND, 4th Test: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சுதேர்வு!

இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 02, 2021 • 15:09 PM
ENG vs IND, 4th Test: England have won the toss and have opted to field
ENG vs IND, 4th Test: England have won the toss and have opted to field (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரில் சமனிலையில் உள்ளன.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. 

Trending


இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சாம் கரண், ஜோஸ் பட்லர் ஆகியோருக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஒல்லி போப் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

அதேசமயம் இந்திய அணியில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோருக்கு பதிலாக உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பிடித்துள்ளது. இன்றைய போட்டியிலும் அஸ்வின் தேர்வு செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி: ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி (கே), அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், டேவிட் மாலன், ஜோ ரூட் (கே), ஒல்லி போப், ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், கிரேக் ஓவர்டன், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement