
இந்தியா - இங்கிலாந்து இடையே ஓவலில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் விராட் கோலி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் மட்டுமே அரைசதம் அடித்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ்(5), ஹசீப் ஹமீத்(0) ஆகிய இருவரது விக்கெட்டுகளையும் ஆரம்பத்திலேயே இழந்தது. நல்ல ஃபார்மில் சதங்களை விளாசி கொண்டிருந்த ஜோ ரூட்டை 21 ரன்னில் வீழ்த்தினார் உமேஷ் யாதவ். நைட் வாட்ச்மேனாக இறங்கிய ஓவர்டன் ஒரு ரன்னிலும், டேவிட் மலான் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து 62 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து அணி. அதன்பின்னர் பேர்ஸ்டோவும், ஒல்லி போப்பும் இணைந்து சிறப்பாக ஆடி 6ஆவது விக்கெட்டுக்கு 89 ரன்களை சேர்த்தனர். பேர்ஸ்டோ 37 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஒல்லி போப், 81 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய மொயின் அலி 35 ரன்கள் அடித்தார்.