ENG vs IND: ரோஹித் - புஜாராவுக்கு காயம்; இந்திய அணிக்கு புதிய தலைவலி!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் ரோஹித் சர்மா, புஜாரா ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 368 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. இதையடுத்து இங்கிலாந்து அணி இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் புஜாரா இருவரும் காயம் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் பீல்டிங் செய்ய வரவில்லை.
மேலும் இருவரது காயம் குறித்தும் அணி மருத்துவ குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். ஒருவேளை இருவரது காயமும் தீவிரமடையும் சமயத்தில் அவர்கள் அடுத்த போட்டிக்கு தயாராக முடியுமான என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
ஏற்கெனவே வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், ஆவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிலையில், ரோஹித் மற்றும் புஜாராவின் காயம் அணி நிர்வாகத்திற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now