
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4ஆவது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிமுதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களை குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 99 ரன்கள் முன்னிலையும் பெற்றது.
அதன்பின் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும் - கே எல் ராகுலும் இணைந்து மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 83 ரன்களை சேர்த்து கொடுத்தனர். இதில் சிறப்பாக விளையாடி வந்த ராகுல் 46 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.
ஆனால் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சர்மா சதமடித்தார். வெளிநாட்டில் ரோஹித் சர்மா அடிக்கும் முதல் டெஸ்ட் சதமாகவும் இது அமைந்தது. அவருடன் இணைந்து விளையாடிய புஜாரா அரைசதம் அடித்தார். இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 153 ரன்களை குவித்தனர்.