
இந்தியாவுடனான 4ஆவது டெஸ்ட் ஆட்டத்துக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளதாக பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரில் சமன்நிலையில் உள்ளன.
இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காயம் காரணமாக மார்க் வுட் 3ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில் இந்தியாவுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் மார்க் வுட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் விளையாடுவர் என இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.