விராட் கோலியின் கேட்சை தவறவிட்டது குறித்து மனம் திறந்த மாலன்!
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் கேட்சுகளை இருமுறை நழுவவிட்டதை மறக்க முடியாது என்று இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் கூறியுள்ளார்.
சிறந்த டி20 வீரரான டேவிட் மலான், இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். 33 வயது மலான், இங்கிலாந்து அணிக்காக 15 டெஸ்டுகள், 6 ஒருநாள், 30 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் கடைசியாக இந்தியாவுக்கு எதிராக 2018ஆம் ஆண்டுல் விளையாடினார்.
அத்தொடரில் விராட் கோலி தனது முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் எடுத்ததோடு, டெஸ்ட் தொடரில் 593 ரன்கள் எடுத்து அசத்தினார். அதற்கு காரணம் விராட் கோலியின் அவர் அளித்த இரு கேட்சுகளை ஸ்லிப் பகுதியில் நின்ற டேவிட் மாலன் நழுவவிட்டார் . முதல்முறை கோலி 21 ரன்களிலும் 2ஆவது முறை 51 ரன்களிலும் விளையாடிக்கொண்டிருந்தார்.
Trending
இந்நிலையில் இதுகுறித்து பேசிய மாலன், “கோலியின் இரு கேட்சுகளை நழுவவிட்டதை என்னால் மறக்க முடியாது. அதனால் அவர் 150 ரன்கள் வரை எடுத்துவிட்டார். நல்ல நினைவாக அது அமையவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் என்றால் என்ன என்பதை அது உணர்த்துகிறது.
சிலசமயங்களில் நீங்கள் ரன்கள் எடுக்க மாட்டீர்கள், கேட்சுகளை நழுவவிடுவீர்கள். எல்லாமே தவறாக அமையும். அதன்பிறகு ஸ்லிப் பகுதியில் அவ்வளவாக நான் நிற்பதில்லை. கவுண்டி கிரிக்கெட்டில் வெவ்வேறு பகுதிகளில் ஃபீல்டிங் செய்துவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் திடீரென்று ஸ்லிப் பகுதியில் நிற்பது கடினமாக இருந்தது.
Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
எனினும் இங்கிலாந்துக்காக விளையாடும்போது எல்லாவிதமான வாய்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டும். அடுத்த வாய்ப்பு மீண்டும் வந்தால் சில கேட்சுகளைப் பிடிப்பதில் ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now