Advertisement

ENG vs IND: இந்திய அணியின் லெவனை கணித்த தீப்தாஸ் குப்தா!

இந்திய டெஸ்ட் அணியின் லெவனை தேர்வு செய்துள்ள தீப்தாஸ் குப்தா, தனது அணியில் சாய் சுதர்ஷன் மற்றும் ஷர்தூல் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்காதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
ENG vs IND: இந்திய அணியின் லெவனை கணித்த தீப்தாஸ் குப்தா!
ENG vs IND: இந்திய அணியின் லெவனை கணித்த தீப்தாஸ் குப்தா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 16, 2025 • 04:41 PM

India vs England 1st Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா தேர்வு செய்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 16, 2025 • 04:41 PM

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி லீட்ஸில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான இரு நாட்டு அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து சென்று பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேசமயம் இந்த தொடருக்கான இந்திய அணியில் உள்ளூர் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன், கருண் நாயர், ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி லெவனில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் கிரிக்கெட் தீப்தாஸ் குப்தா கணித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய தீப்தாஸ் குப்தா,  "கருண் நாயர் மற்றும் சாய் சுதர்ஷன் இருவருக்கும் இடையில் யாருக்கு இடம் கொடுப்பது என்று கடந்த சில நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். தற்போது நான் லெவனில் கருண் நாயரை தேர்வு செய்வேன். அவருக்கு அனுபவம் உள்ளது, அவர் நீண்ட காலத்திற்குப் பிறகு விளையாடுகிறார், அவர் அணியில் இருந்தால் நீங்கள் அவரது அனுபவத்தை பயன்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் அற்புதமாக விளையாடிய கருண் நாயர் இரட்டை சதமடித்து அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு தீப்தாஸ் குப்தா இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் கேஎல் ராகுலைத் தேர்ந்தெடுத்துள்ளார். மூன்றாம் வரிசையில் கருண் நாயரையும், நான்கம் வரிசையில் ஷுப்மன் கில்லையும் தேர்வு செய்துள்ளார். 

அவர்களைத் தொடர்ந்து ரிஷப் பந்த், நிதீஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தேர்ந்தெடுத்துள்ள அவர், பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருடன் பிரஷித் கிருஷ்ணாவையும் தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் சமீபத்தில் இந்திய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் சதமடித்து அசத்திய ஷர்தூல் தாக்கூருக்கு அவர் தனது அணியில் இடம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: LIVE Cricket Score

தீப்தாஸ் குப்தா தேர்வு செய்த இந்திய அணியின் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், கருண் நாயர், சுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement