
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதன்மை வீரர்களைக் கொண்டு ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது தற்போது எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதே வேளையில் இந்த டெஸ்ட் போட்டி முடிந்த அடுத்த நாளே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது துவங்க உள்ளது.
அதேபோன்று டி20 தொடர் முடிந்த சில நாட்களில் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளது. இப்படி அடுத்தடுத்த போட்டிகள் இந்திய அணிக்கு இருப்பதினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாட அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இளம் இந்திய அணி இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் பங்கேற்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டது.
பின்னர் 2 ஆவது மற்றும் 3 ஆவது ஆட்டத்தில் சீனியர் வீரர்கள் அணியுடன் இணைகின்றனர். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள இந்த முதலாவது டி20 போட்டியில் பங்கேற்க அயர்லாந்தில் இருந்து இங்கிலாந்து வந்த பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது கவுண்டி அணியுடன் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது.