நிதிஷுக்கு பதிலாக குல்தீப் யாதவை லெவனில் சேர்க்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

India vs England 4th Test: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நிதிஷ் ரெட்டிக்கு பதிலாக குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
மான்செஸ்டரில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரில் இந்திய அணி ஏற்கெனவெ 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும் என்ற கட்டாயத்துடன் எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் இந்திய அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மேற்கொண்டு இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயின் லெவனில் யார் யார் இடம்பிடிப்பார்கள், இதில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பிடிப்பாரா, கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பு வழக்கப்படுமா போன்ற கேள்விகளும் சந்தேகங்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணியில் நிதிஷ் ரெட்டிக்கு பதிலாக குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு தர வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியா ஹர்பஜன் சிங், “லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு முன்பே நான் குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்று கூறிவருகிறேன்.ஏனென்றால் இந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சுதந்திரமாக பேட்டிங் செய்யும் விதத்தைப் பார்த்தால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர்களால் அவ்வளவு எளிதாக விளையாட முடியாது. அதிலும் குறிப்பாக பந்தை இருபுறமும் சுழலும் ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக விளையாடுவது சாத்தியமில்லை.
எனவே குல்தீப் முக்கியமான தருணங்களில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பந்து வீச்சாளராக இருக்கலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில், புதிய பந்துக்காக காத்திருப்பது மட்டுமல்ல, பெரிதாக எதுவும் நடக்காதபோது கூட விஷயங்களைச் சாத்தியமாக்கக்கூடிய ஒருவர் உங்களுக்குத் தேவை. அதுபோன்ற சூழலில் விக்கெட்டுகளை வீழ்த்து பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.
அதனால் அடுத்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரு பேட்டரை நீங்கள் இழக்க வேண்டியிருக்கும். ஆனால்அந்த பேட்ஸ்மேன் யார் என்பதை அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். அதுவே என்னைக் கேட்டால் நான் நிதிஷ் ரெட்டியை நீக்கிவிட்டு குல்தீப் யாதவை லெவனில் சேர்ப்பேன்” என்று கூறியுள்ளார். குல்தீப் யாதவ் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 56 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.
Win Big, Make Your Cricket Tales Now