
ENG vs IND :James Anderson becomes the third-highest wicket-taker in Test cricket (Image Source: Google)
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நாட்டிங்ஹாமிலுள்ள ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் 84 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் ராகுலின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டேஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி ஆண்டர்சன் சாதனைப் படைத்துள்ளது.