
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியனது எதிர்வரும் ஜூன் 20ஆம் தேதி லீட்ஸில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து இத்தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி இன்று இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் இங்கிலாந்து அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இட்ம்பிடித்துள்ள ஜோஷ் டாங்க் காயத்தை சந்தித்துள்ளார்.
அதன்படி இந்திய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து லையன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜோஷ் டங்க் காயத்தை சந்தித்தார். இதுகுறித்து வெளியான தகவலின் அடிப்படையில், இரண்டாவது இன்னிங்ஸில் ஜோஷ் டங்க் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசிய் நிலையில் காயம் காரணமாக மைதானத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இருப்பினும் அவரது காயம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.