
இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகள் மட்டுமே நடந்தன. அதில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகித்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட அந்த கடைசி டெஸ்ட் போட்டி இந்திய அணியின் தற்போதைய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நடக்கிறது. கடந்த ஆண்டு இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி; இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்.
இந்த முறை இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். இரு அணிகளின் கேப்டன்கள் மட்டுமல்லாது, மொத்த அணி சூழலே மாறியிருக்கிறது என்பதால் போட்டி கடுமையாக இருக்கும். கடந்த ஆண்டு ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளர். இந்த முறை ராகுல் டிராவிட். அதேபோல இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இப்போது பிரண்டன் மெக்கல்லம் செயல்படுகிறார்.