
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 4ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை 1-4 எனத் தோல்வியடைந்த இந்திய அணி, தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்போடு விளையாடவுள்ளது.
கடந்த முறை இந்திய அணி கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடினார். அதேபோன்று தற்போதும் விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன. இந்த நிலையில் இங்கிலாந்து தொடரில் முக்கியமான ஐந்து சாதனைகளை படைக்க இருக்கிறார்.
விராட் கோலி டெஸ்ட் போட்டியில் 7547 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் 453 ரன்கள் அடித்தால் 8 ஆயிரம் ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெறுவார். தற்போது வரை 92 போட்டிகளில் 27 சதம், 25 அரைசதம் அடித்துள்ளார். அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் வரிசையில் ஜஸ்டின் லாங்கர் (7696), இயன் பெல் (7727), மிக்கேல் ஆதர்டன் (7728) ஆகியோரை பின்னுக்கு தள்ள இருக்கிறார்.