Advertisement

ENG vs IND, 2nd Test: ஆண்டர்சனை கெட்ட வார்த்தையில் திட்டிய கோலி!

இந்திய அணி வீரர்களை சீண்டி வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன், தற்போது கேப்டன் கோலியை சீண்டி தேவையின்றி மாட்டிக்கொண்டார்.

Advertisement
eng-vs-ind-virat-kohli-verbal-spat-with-james-anderson-watch-video
eng-vs-ind-virat-kohli-verbal-spat-with-james-anderson-watch-video (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 15, 2021 • 09:25 PM

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியானது தற்போது நான்காவது நாளில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 15, 2021 • 09:25 PM

இரு அணிகளுமே முதலாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி உள்ள காரணத்தினால் தற்போது இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த அதிக எதிர்பார்ப்புடன் போட்டி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Trending

இந்நிலையில் இன்றைய நான்காவது போட்டியின் போது இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஆண்டர்சனை கடுமையான வார்த்தைகளில் திட்டிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் இளம் வீரரான சிராஜை வேண்டுமென்றே ஆண்டர்சன் சீண்டியிருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது இன்றைய போட்டியிலும் கோலியை அதே போன்று சீண்டிப் பார்த்தார். ஆனால் விராத் கோலியோ தனக்கே உரித்தான பாணியில் அவருக்கு ஆக்ரோஷமான பதிலடி கொடுத்தார். இன்றைய போட்டியின் இரண்டாவது இன்னிங்சின் போது துவக்கத்திலேயே 2 விக்கெட்டை இழந்து நிலையில் விளையாட வந்த விராட் கோலி 17ஆவது ஓவரில் போது புஜாரா அடித்த பந்தில் ஒரு ரன் ஓடலாம் என்று நினைத்தார்.

ஆனால் பிட்சின் குறுக்கே ஆண்டர்சன் நடந்து சென்றதால் கடுமையான கோபம் அடைந்த கோலி “இது போட்டியின் பிட்ச் ஆண்டர்சன்”, “உங்கள் வீட்டு தோட்டம் கிடையாது” என கெட்ட வார்த்தையுடன் அவரை திட்டினார். கோலி இவ்வாறு பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இந்நிலையில் நான்காம் நாள் தேநீர் இடைவேளை முடிந்துள்ள நிலையில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் புஜாரா 37 ரன்களுடனும், ரஹானே 42 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement